புதுவையில் ரூ.12 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட ஒற்றை மீன்; மீனவர் மகிழ்ச்சி

புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் உள்ள மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை மீனானது 12 ரூபாய்க்கு ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

Share this Video

புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் கோதாவரி ஆற்றுப்படுகையில் உள்ளது. இங்கு கடலும், ஆறும் கலக்கும் கழிமுக பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். இந்த பகுதியில் பாண்டுகப்பா என்ற அரிய வகை மீன் எப்போதாவது வலையில் சிக்கும். 

இந்த வகை மீனுக்கு ஆந்திர மாநில மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஏனாமில் பொன்னாட வரதம் என்ற மீனவர் வலையில் 20 கிலோ எடையுள்ள பாண்டு கப்பா மீன் சிக்கியது. இந்த மீன் துறைமுக பகுதியில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. இதனை ரத்தினம் என்பவர் 12 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி சென்றார்.

Related Video