முதல்வர் ரங்கசாமிக்கு ஆழ்கடலில் பேனர் பிடித்த ஆதராவளர்கள்; வீடியோ இணையத்தில் வைரல்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு அவரது ஆதரவாளர்கள் ஆழ் கடலில் பேனர் வைத்து வாழ்த்து தெரிவித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Share this Video

புதுச்சேரி முதலமைச்சரும், என் ஆர் காங்கிரஸ் நிறுவனத் தலைவருமான ரங்கசாமியின் பிறந்தநாளை புதுச்சேரியில் உள்ள அவரது ஆதரவாளர்களும், என் ஆர் காங்கிரஸ் கட்சியினரும் கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம். இதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பேனர்களை வைத்து அசத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஒரு படி மேலாக சென்று நடுக்கடலில் முதலமைச்சர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் பேனர் வைத்துள்ளனர். முதலமைச்சர் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்து ஆழ் கடல் நீச்சல் வீரர்கள் பேனரை பிடித்து முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ தற்போது புதுச்சேரியில் வைரல் ஆகி வருகிறது.

Related Video