பெண் ஊழியரின் கவனத்தை திசை திருப்பி செல்போனை திருடிய மர்ம நபர்; சிசிடிவியால் அம்பலம்

புதுச்சேரி மெடிக்கல் லேப் பெண் ஊழியரிடம் டெஸ்ட் ரிப்போர்ட்டை காட்டுவது போல் காட்டி நூதன முறையில் செல்போன் திருடிய மர்ம நபர்.

First Published Jun 17, 2023, 9:59 AM IST | Last Updated Jun 17, 2023, 9:59 AM IST

புதுச்சேரி நெல்லித்தோப்பு லெனின் வீதியில் தனியார் லேப் மெடிக்கல் ஒன்று அமைந்துள்ளது. இங்கு தாட்சாயிணி என்ற டெக்னீசியன் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர், தாட்சாயிணியிடம் பேசி கொண்டு தன்னிடம் இருந்த மெடிக்கல் ரிப்போர்ட்டை காட்டுகிறார். இதற்கு டெக்னீசியன் பதில் அளித்தும் மறுபடியும் மெடிக்கல் ரிப்போர்ட்டை காட்டுவது போல் காட்டி கையில் இருந்த வெள்ள பேப்பரை, செல்போன் மீது வைத்து லாவகமாக செல்போனை திருடி சென்றார்.

இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதனை அடுத்து செல்போனை காணவில்லை என்று அதிர்ச்சி அடைந்த லேப் டெக்னீசியன் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு செல்போனை திருடி சென்ற மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மெடிக்கல் லேபுக்கு வந்த ஒரு வாலிபர் ரிப்போர்ட்டை காட்டுவது போல் காட்டி செல்போனை திருடி சென்ற சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Video Top Stories