புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்ற அழகி போட்டி; அழகிகளின் ஒய்யார நடையில் மெய்சிலிர்த்துபோன பார்வையாளர்கள்

புதுச்சேரியில் கடற்கரை அருகே தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற அழகிப் போட்டியில் பங்கேற்ற இளம் பெண்கள் ஒய்யார நடைபோட்டு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தனர்.

Share this Video

புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே தனியார் அமைப்பு சார்பில் டிசைனர் கேட் வாக் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்போட்டியில் பெங்களூரு, புதுவை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட அழகிகள் கலந்து கொண்டு வண்ண வண்ண ஆடைகள் அணிந்து விதவிதமான ஸ்டைலில் ஒய்யாரமாக நடந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.

தனிச்சுற்று, இரட்டையர் சுற்று, குழு என மூன்று சுற்றாக நடைபெற்ற கேட் வாக்கில் பாரம்பரிய உடை, மாடலிங் உடை, என வண்ண வண்ண ஆடைகள் அணிந்து அழகிகள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் நடந்து தங்களது அழகையும், நளினத்தையும் வெளிப்படுத்தி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தார்கள்.

மேலும் அழகிகளுக்கு இணையாக ஆணழகன்களும் கலந்து கொண்டு கேட் வாக் செய்து பார்வையாளர்களை அசத்தினார்கள். கடற்கரை சாலையில் நடைபெற்ற கேட் வாக் போட்டியை புதுச்சேரி மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர். மேலும் அழகி போட்டியில் கலந்து கொண்ட மாடலின் அழகிகள் மற்றும் ஆணழகன்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் பரிசுகள் மற்றும் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Related Video