Watch : புறக் காவல் நிலையம் அமைக்க ஒத்துழைத்தது என் தவறு தான்! மக்களிடம் பொது மன்னிப்பு கேட்ட சமூக ஆர்வலர்!
சுனாமி குடியிருப்பில் புறக்காவல் நிலையம் அமைக்க ஒத்துழைப்பு கொடுத்தது எங்கள் தவறு தான் என்று, வீடு வீடாக சென்று மன்னித்து விடுங்கள் என்று கைகூப்பி கும்பிடு போட்டு சமூக ஆர்வலர் நூதன போராட்டம் நடத்தினார்.
புதுச்சேரி, காலாப்பட்டு பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அம்பேத்கர் சட்டக் கல்லூரி அருகே 1400 சுனாமி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. இங்கே அடிக்கடி மீனவர்களுக்குள் பிரச்சினை ஏற்படுவதாக கூறி புற காவல் நிலையம் அமைக்க சமூக ஆர்வலர் குமார் கோரிக்கை விடுத்திருந்தார். பொதுமக்களின் எதிர்ப்பை மீறி புறக்காவல்நிலையம் அமைக்கப்பட்டது. தற்போது அது தவறு என உணர்ந்து கொண்டதாகவும், பொதுமக்கள் மன்னிக்க வேண்டும் என்றும் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.