ஆளுநர் மாளிகையில் உற்சாகமாக நடனமாடிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

புதுவையில் நடைபெற்ற ஜம்மு லடாக் உதய நாள் விழாவில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தார்.

Share this Video

ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய மாநிலங்களில் உதய நாள் விழா புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

துணைநிலை ஆளுநர் தமிழிசை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது ஜம்மு காஷ்மீர் லடாக்கின் நடன கலைஞர்கள் பங்கேற்று உற்சாகமாக நடனம் ஆடினார்கள். அவர்களுடன் தமிழிசையும் சேர்ந்து உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Related Video