Asianet News TamilAsianet News Tamil

ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்பட்ட நாகாலாந்து தினவிழா; நடனமாடி கொண்டாடிய ஆளுநர் தமிழிசை

புதுசசேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நாகாலாந்து தினவிழாவில் கலந்து கொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடனமாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில்  நாகலாந்து உதய நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் புதுச்சேரியில் வாழும் நாகலாந்து இன மக்கள் பங்கேற்று சிறப்பித்தனர் நிகழ்ச்சியில் நாகலாந்து பாரம்பரிய நடனத்தை ஆடினர். இதில் ஆளுநர் தமிழிசை நாகலாந்து மக்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநர் மாளிகை தர்பார் ஹாலில் நாகலாந்து இன மக்கள் பாடிய பாடல் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. சொர்க்கத்தில் இருப்பது போல் என்னை உணர வைத்தது. நாகலாந்து வாழ்வின் கொண்டாட்டத்தை உணர்த்தும். வாழ்வே கொண்டாட்டம் என்ற கருத்தை நாட்டு மக்கள் உணர்த்துகின்றனர்.

நாகலாந்து இன மக்களின் ஆடை கவரும் வகையில் உள்ளது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு மாநில தின விழாக்களும் இங்கு கொண்டாடப்படுகின்றன.

 புதுச்சேரி வளர்ச்சிக்கு நாகலாந்து மக்கள் தொண்டாற்றி வருகின்றனர். கலாசாரம் மற்றும் மொழியால் வேறாக இருந்தாலும் இந்தியர் என்ற ஒரே குடையின் கீழ் வருகிறோம். எல்லைகள் வேறாக இருந்தாலும் நம் சகோதரத்துவத்தில் ஒற்றுமையில் இருக்கிறோம். நட்புறவிலும் தொடர்வோம் என்று குறிப்பிட்டார்.

Video Top Stories