பிரசித்தி பெற்ற செங்கழுநீரம்மன் ஆலய தேரோட்டம்; முதல்வர், ஆளுநர் பங்கேற்று தொடங்கி வைப்பு

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற செங்கழுநீரம்மன் ஆலய தேரோட்ட விழாவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்சாமி ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.

First Published Aug 18, 2023, 12:31 PM IST | Last Updated Aug 18, 2023, 12:31 PM IST

புதுச்சேரி மீனவ கிராமமான வீராம்பட்டினத்தில் பழமை வாய்ந்த செங்கழுநீரம்மன் தேவஸ்தானம் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் வெள்ளிக் கிழமையில் இருந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் தொடர்ச்சியாக வீராம்பட்டினமே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். 5ம் வெள்ளியன்று தேர்த்திருவிழா நடைபெறும். இந்த ஆலயத்தில் உள்ள தேவதாருவின் முழு உருவம் மரத்தால் செய்யப்பட்டது.

அலங்கரிக்கப்பட்ட தேரில் செங்கழுநீரம்மன் தேரடி வீதியில் உலா வந்து தேர் முற்றத்தில் வந்து நிற்கும். இந்த தேர் திருவிழாவின் சிறப்பு, பிரஞ்சு ஆட்சிக்காலம் முதலே ஆளுநர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைப்பர்.

இதன்படி செங்கழுநீரம்மன் தேவஸ்தான தேர்த் திருவிழா வெளளிக்கிழமையான இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரோட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள்  ஜெயக்குமார், சாய் சரவணன்  உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.