விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்தை அவரது இல்லத்தில் சந்தித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நலம் விசாரித்தார்.

First Published Nov 4, 2023, 10:59 PM IST | Last Updated Nov 4, 2023, 10:59 PM IST

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு கடந்த 3 தினங்களுக்கு முன்பு இருதயத்தில் அடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2-ஸ்டெண்டுகள் வைக்கப்பட்டது. மேலும் 

ஆனந்தை நடிகர் விஜய் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த நிலையில் நேற்று மாலை சென்னை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்திற்கு திரும்பினார். மேலும் அவரை 15 நாட்கள் முழு ஓய்வு எடுக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வரும் புஸ்சி ஆனந்தை அவரது இல்லத்திற்கு சென்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நலம் விசாரித்தார். மேலும் முதல்வரின் ஆன்மீக குருவான அப்பா பைத்திய சாமி கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழத்தையும் அவருக்கு வழங்கி நெற்றியில் விபூதியும் வைத்தார்.

Video Top Stories