புதுச்சேரி துணைநிலை ஆளுநரை பூங்கொத்து கொடுத்து வரவேற்று முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரிக்கு வருகை தந்த பொறுப்பு துணைநிலை ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் ரங்கசாமி  உட்பட சபாநாயகர், அமைச்சர்கள் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது.

Share this Video

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய பொறுப்பு துணைநிலை ஆளுநராக ஜார்க்கண்ட் மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணனை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்தது. அதன்படி இன்று மாலை 7:30 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. 

இதற்காக புதுச்சேரிக்கு வருகை தந்த ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்த சி.பி ராதாகிருஷ்ணனுக்கு காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது.

Related Video