இளமை திரும்புதே; ஸ்டைலாக பைக்கில் வந்து வாக்களித்த முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வழக்கம் போல் தனது யமஹா ஆர் எக்ஸ் 100 இருசக்கர வாகனத்தில் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.

First Published Apr 19, 2024, 11:34 AM IST | Last Updated Apr 19, 2024, 11:34 AM IST

நாட்டின் 18வது மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி வருகின்ற ஜூன் மாதம் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் முதல் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திலாசுப்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக வந்தார். 

வழக்கம் போல் இளமை பருவத்தில் துவங்கி அதன்பின் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர், கட்சித் தலைவர், என  வளர்ச்சி அடைந்த போதும்  வாக்களிக்க வரும் பொழுதெல்லாம் யமஹா ஆர் எக்ஸ் 100 இருசக்கர வாகனத்தில் வந்து வாக்களித்துவிட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அது அவருடைய சென்டிமென்ட் என்பதால் இம்முறையும் அதே யமஹா ஆர் எக்ஸ் 100 இருசக்கர வாகனத்தில் வந்து தனது வாக்கினை பதிவு செய்து  ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டு முதலமைச்சர் ரங்கசாமி சென்றார்.

Video Top Stories