என்ன கேக்காம நீ உள்ள வந்திருக்கலாம்; ஆனா நான் சொல்லாம உன்னால ஒரு அடி இறங்க முடியாது - வைரல் வீடியோ

புதுச்சேரியில் மாடியில் ஏறிய நாயை கீழே இறங்க விடாமல் பூனை ஒன்று 1 மணி நேரமாக நாயை அச்சுறுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

First Published Jun 8, 2023, 5:53 PM IST | Last Updated Jun 8, 2023, 5:53 PM IST

புதுச்சேரி அடுத்த வம்புபட்டு கிராமத்தில் கற்பக விநாயகர் நகரில் உள்ள வீட்டு மாடியில் இருந்து நாய் ஒன்று கீழே இறங்கியது. அப்போது அந்த வழியில் பூனை ஒன்று இருந்தது. நாய் வருவதை பார்த்த, அந்த பூனை சீற்றத்துடன் நாயை தடுத்து நிறுத்தியது. இதனால் கீழே இறங்க முயன்ற நாயால்,  முடியவில்லை. 

அப்போது அந்த பூனை என்னைக் கேட்காமல் நீ உள்ள வந்து இருக்கலாம். ஆனால் நான் சொல்லாமல் நீ வெளியே போக முடியாது என்றபடி ஒரு மணி நேரமாக நாயை படிக்கட்டில் இருந்து இறங்கவிடாமல் பூனை வழி மறித்துக் கொண்டே இருந்தது.

ஆனால் கீழே இறங்க வேண்டும் என்ற நாய்க்கு அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததால், மிகவும் கஷ்டபட்டு  கைபிடி இடைவெளியில் நாய் குதித்து ஓடியது. அப்போதும் கூட நாயை, முறைத்து படியே பூனை பார்த்து கொண்டு இருந்தது. தற்போது இந்த காட்சி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Video Top Stories