புதுவையில் இரிடியம் கடத்தலா? நாராயண சாமியிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - அதிமுக

புதுச்சேரி மாநிலத்தில்  இரிடியம் கடத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள முன்னாள் முதல்வர் நாராயணசாமியை, மத்திய அரசு அதிகாரிகள் நேரடியாக விசாரணை செய்ய வேண்டும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

First Published Mar 18, 2024, 5:51 PM IST | Last Updated Mar 18, 2024, 5:51 PM IST

புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார். நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கோடிக்கணக்கான பணம் கையூட்டு பெறப்படுவதாக பலவேறு குற்றச்சாட்டுகள் வருகின்றன. இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்.

ராக்கெட் தயாரிப்பில் மிக மிக முக்கிய அவசியமான பொருளாக இருக்க கூடிய இரிடியம் புதுச்சேரியில் இருந்து கடத்தப்படுவதாக  முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.  நாராயணசாமியின் குற்றச்சாட்டில் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது குறித்து மத்திய அரசு முதலில் நாராயணசாமியிடம் நேரடி விசாரணை நடத்த வேண்டும். 

மத்திய நிதி துறை, சிபிஐ, இந்திய பாதுகாப்பு அமைச்சகம், அமலாக்கத்துறை, ஐபி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நாராயணசாமியுடம் விசாரிக்க வேண்டும். அல்லது இரிடியம் திருடி விற்பது தொடர்பான தகவல்களை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சிபிஐ உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளின் உயரதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.

Video Top Stories