Watch : ஒரு நாள் மாவட்ட ஆட்சியரான அரசு பள்ளி மாணவி! - மக்கள் பணி செய்ய ஆசை!

புதுச்சேரி கதிர்காமம் அரசு மேல்நிலைப்பள்ளியை  சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா இன்று ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பணிக்கு அமர்த்தபட்டார்.

Share this Video

புதுச்சேரி அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மக்கள் பணிகள் செய்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியருடன் ஒரு நாள் என்ற நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணி தொடங்கப்பட்டது. அதன்படி புதுச்சேரி கதிர்காமம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பணிக்கு அமர்த்தபட்டார். காலை மாணவி ஐஸ்வர்யா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தவுடன் அவருக்கு சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் வரவேற்று அவரது இருக்கையில் அமர வைத்து அலுவல் பணிகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.

Related Video