Asianet News TamilAsianet News Tamil

ரூ.16 ஆயிரத்திற்கு விலைபோன அரியவகை மீன்; புதுவை மீனவர் மகிழ்ச்சி

புதுவையில் பிடிபட்ட அரியவகை மீனான புலசா மீன் 2 கிலோ ரூ.16 ஆயிரத்திற்கு விலைபோனதால் மீனவர் மகிழ்ச்சி.

புதுச்சேரியின் ஏனாம் பிராந்திய ஆந்திர மாநில கோதாவரி ஆற்று பகுதியில் உள்ளது. கடலும், ஆறும் சேர்ந்த பகுதியில் மீனவர்கள் வலையில் ஆந்திர மக்கள் உண்ணும் அரிய வகை மீன்,"புல்சா" பிடிப்படும். மீன்களின் ராஜா என இம்மக்கள் அழைக்கின்றனர். அதிக சுவையும், சத்துக்களும் கொண்ட இந்த மீன் கடலில் இருந்து இன பெருக்கத்திற்காக ஆற்றுப்பகுதிக்கு வரும் போது  பிடிபடும். அப்போது  பிடிபடும் போது ஏலம் மூலமே விற்கப்படும். அந்த வகையில் கடந்த 2021ம் ஆண்டு செப்டெம்பர் 9ம் தேதி அதிகபட்சமாக இரண்டு கிலோ எடை கொண்ட மீன் ஒன்று 25,000 ரூபாய்க்கும் மற்றொரு மீன் 23,000 ரூபாய்க்கும் ஏலம் போனது.

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் புலசா மீன் அதிக அளவில் கிடைக்கும் என்பதால் தொடர்ந்து மீனவர்கள் வலை வீசி வருகின்றனர். புலசா மீன் கிடைக்கும் என்ற ஆவலில் தினமும் வாடிக்கையாளர்கள் ஏனாம் மீன் அங்காடிக்கு வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஏனாம் மீனவர் வலையில் 2 கிலோ எடையிலான புல்சா  மீன் சிக்கியது. இந்த மீன் 16 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது.

Video Top Stories