கூட்டணி விவகாரத்தில் கருத்து தெரிவிக்க எங்களுக்கு அதிகாரம் கிடையாது - வானதி சீனிவாசன்

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அறிவித்தது குறித்து கருத்து தெரிவிக்க எங்களுக்கு அதிகாரம் கிடையாது என சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

First Published Sep 25, 2023, 8:54 PM IST | Last Updated Sep 25, 2023, 8:54 PM IST

சென்னையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் குறித்து கட்சியின் தேசிய தலைமை அறிவிக்கும் என தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், ஏற்கனவே பாஜக மாநில தலைவர் தெரிவித்திருக்கிறார். இது குறித்து தேசிய தலைமை அறிவிக்கின்ற வரை நாங்கள் எந்த கருத்தையும் வெளியிடுவதாக இல்லை. இது குறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் எங்களுக்கு அறிவுறுத்தல் தருவார்கள். அப்போது எங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கிறோம். அதிமுக வினர் கூறிய கருத்துக்களும், அவர்களுடைய முடிவுகள் பற்றியும் கருத்து சொல்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.

Video Top Stories