அதிமுகவுடன் இணைய வாய்ப்பே இல்லை - டிடிவி தினகரன்

தற்போது அதிமுக தவறானவர்களின் கையில் உள்ளது. அதனை மீட்க வேண்டும் என்ற இலக்கை அடையும் வரை போராடுவோம். அதிமுகவுடன் இணையும் தவறை ஒருபோதும் நாங்கள் செய்ய மாட்டோம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளாா்.
 

Share this Video

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 90% நிர்வாகிகள் EPS உடன் இருப்பதை மட்டும் நீதிமன்றம் பார்க்காது. பொதுக்குழு சட்டப்படி கூட்டப்பட்டதா என்றே பார்க்கும். அதற்கு மேல், தேர்தல் ஆணைய முடிவும் இருக்கிறது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட நிறைய வாய்ப்புகள் உள்ளது.

மேலும் தற்போது அதிமுக தவறானவர்களின் கையில் உள்ளது. அதனை மீட்க வேண்டும் என்ற இலக்கை அடையும் வரை போராடுவோம். அதிமுகவுடன் இணையும் தவறை ஒருபோதும் நாங்கள் செய்ய மாட்டோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளாா்.

Related Video