ஆளுநர் வேண்டும் என்றே அரசியல் பண்ண நினைக்கிறார்! - பொன்முடி!

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்

Share this Video

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தின் ஆளுநர் வழக்கமாக செய்யும் அரசியலைத் தொடர்ந்து செய்து வருகிறார் எனக் குற்றம் சாட்டினார். எனது அலுவலகத்தில் சிண்டிகேட் கூட்டம் நடைபெறுவதாக கூறும் ஆளுனர் துணைவேந்தர்கள் கூட்டத்தை ஏன் ஆளுநர் மாளிகையில் நடத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார்

செண்ட் கூட்டங்கள் பல்கலைக்கழகங்களில் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன சிண்டிகேட் மற்றும் மற்றவற்றை பற்றி பேச உங்களுக்கு தகுதி இருக்கிறதா என்று ஆளுநர் யோசித்து பார்க்க வேண்டும். ஆளுநர் அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காகத்தான் இவ்வாறான செயல்பாடுகளை செய்து கொண்டு இருக்கிறார்

பாஜக மாநிலத் தலகவர் அண்ணாமலையே ஆளுநர் அரசியல் பேச கூடாது என தெரிவித்துள்ளார். கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காகவே முதலமைச்சர் நான் முதல்வன் திட்டம் புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்துள்ளார். கல்வித்துறையில் முதலமைச்சர் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் சாதாரணமானதல்ல. 

உயர்கல்வித்துறைச் செயலாளரை தொடர்பு கொள்ள முடியவில்லை என ஆளுநர் கூறுகிறார். நாகப்பட்டினம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை ஆளுநர் மாளிகைக்கு வந்து பட்டம் பெற வேண்டும் என ஆளுநர் கூறுவது சரியா?. அதிமுக ஆட்சியில் கல்லூரிகளில. காலியாக இருந்த இடங்களுக்கு அனைத்து பணியாளர்களும் தற்காலிகமாக போடப்பட்டுள்ளது.

ஆளுநர் இங்கு என்ன நடக்கிறது என்பதை முழுமையாக தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்றார். 

Related Video