நீட் தற்கொலையை வைத்து இழிவான அரசியலை செய்கிறது திமுக.. பாஜக நாராயணன் திருப்பதி ஆவேசம் !!

அதிக கல்வி அறிவு பெற்ற மாணவர்கள் தமிழகத்தில் இருக்கும் போது, நீட் தேர்வு ஏன் வைக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.

First Published Aug 19, 2023, 7:00 PM IST | Last Updated Aug 19, 2023, 7:00 PM IST

தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். இப்பேட்டியில் நாராயணன் திருப்பதி நீட் முதல் திமுக ஆட்சி வரை பல்வேறு விவகாரங்களை பற்றி பேசினார். இதில் பேசிய அவர், “தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கும் மேல் அமோக வெற்றி பெறும். இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் ஊழல் தொடர்புடையவர்கள். அமலாக்கத்துறை ஊழல் தொடர்பானவர்களை மட்டுமே சோதனை செய்கிறது.

உச்ச நீதிமன்றமே பாஜக மீது தவறு இல்லை என்று கூறியுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் நீட் தற்கொலைகள் தொடர்பான கேள்விக்கு, நம் நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் பல மாணவர்கள் கடந்த காலங்களில் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துள்ளனர். காவல்துறையிலும் இதே நிலைதான். மது காரணமாக பல்வேறு தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. ஆனால் அதனை நிறுத்தவில்லை. நீட் இல்லாமல் இருந்திருந்தால், பல்வேறு மாணவர்கள் மருத்துவர்கள் ஆகியிருக்க முடியாது.

இது மலிவான, இழிவான அரசியல் ஆகும். தமிழகத்தில் கடந்த 15 வருடங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி சதவீதங்கள் 96க்கும் மேல். மற்ற மாநிலங்கள் குறைவே. தமிழக மாணவர்கள் புத்திசாலிகள். கல்வி முறை சரியாக இருக்கும் தமிழகத்தில் ஏன் நீட் தேர்வு இருக்க கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ பார்க்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. எப்போ தெரியுமா?