உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ பார்க்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. எப்போ தெரியுமா?
கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்த், மோகன்லால், சுனில், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு நடித்து வெளியாகிய ஜெயிலர் படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்து வருகிறது.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் 7 நாட்களில் உலக அளவில் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீஸ்ட் படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் கிடைத்த நிலையில் இந்தப் படம் நெல்சனுக்கு கம்பேக்காக அமைந்துள்ளது.
ஜெயிலர் படத்தில் தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.
ஜெயிலர் படத்தில் ரஜினிக்குப் பிறகு ஷிவ ராஜ்குமாருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. இது தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய வசூல் சாதனையை படைத்தது வருவதாக கூறப்படுகிறது. நேற்று ஜெயிலர் படக்குழு நன்றி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அப்போது பேசிய அவர், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் ஜெயிலர் படத்தை பார்க்க இருப்பதாக கூறினார்.
நாளை லக்னோவில் யோகி ஆதித்யநாத்துடன் ரஜினிகாந்த் தனது சமீபத்திய படமான 'ஜெயிலர்' பார்க்கிறார். ரஜினிகாந்த் இன்று மாலை லக்னோ வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.