முதலில் திருக்குறளை முழுமையாக படியுங்கள்; ஆளுநருக்கு புத்தகம் அனுப்பி போராட்டம்
திருக்குறளை ஆன்மிக நூல் என்று பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆளுநர் ரவிக்கு திருக்குறள் புத்தகத்தை அனுப்பும் போராட்டத்தை நடத்தினர்.
அன்மையில் பொது மேடையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி திருக்குறளை ஆன்மீக நூல் என ஒப்பிட்டு பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயன வாலிபர் சங்கத்தினர் தமிழக ஆளுநருக்கு திருக்குறள் புத்தகங்களை அனுப்பி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அஞ்சல் அலுவலகத்தில் இருந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திருக்குறள் புத்தகங்களை அனுப்பி வைத்தனர்.