திமுக உள்ளிட்ட ஊழல் கட்சிகளிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - பிரதமர் மோடி

திமுக உள்ளிட்ட ஊழல் கட்சிகளிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார்.

First Published Jul 18, 2023, 3:47 PM IST | Last Updated Jul 18, 2023, 3:47 PM IST

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், எப்போதெல்லாம் நாட்டின் அமைப்புகள் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றதோ, அப்போதெல்லாம் ஊழல்வாதிகளின் Tape Recored ஓட ஆரம்பித்துவிடும். ஒன்றும் ஆகவில்லை, எல்லாமே சதித்திட்டம், எங்களை சிக்கவைக்கிறார்கள் என்று கூறுவார்கள்.

தமிழ்நாட்டில் பாருங்கள், ஊழலின் பல குற்றச்சாட்டுகள் வெளிவருகின்றன. ஆனால், இந்த கூட்டணியின் அனைத்துக் (திமுக) கட்சிகளும் அனைவரையும் குற்றமற்றவர்களாக பாதுகாக்கின்றனர். எனவே இவர்களைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே. இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் சகோதர, சகோதரிகளே, நண்பர்களே. 

இவர்களின் சதிகளை உடைத்து நாட்டை வளர்ச்சியடைய செய்ய நாம் அனைவரும் முன்வரவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Video Top Stories