இது யாரு வச்ச பூவு... பழனிச்சாமி வச்ச பூவு; ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி!!

உரிய அனுமதி பெற்று சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் விரைவில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்வோம் என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

First Published Jul 17, 2023, 11:45 AM IST | Last Updated Jul 17, 2023, 11:45 AM IST

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுச் செயலாளராக தன்னை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதாக கூறி எடப்பாடி பழனிசாமி அனைவரது காதிலும் பூ சுற்றுகிறார்.

சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் தமிழ்நாடு டிஜிபி உள்ளிட்டோரிடம் முறையாக அனுமதி பெற்று விரைவில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்வோம் என்றும் புகழேந்தி கூறினார். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் என்பதை மறந்துவிட்டு ஈபிஎஸ் ஆக செயல்படுவதாகவும்; அண்ணாமலையும், பழனிசாமியும் ஒருவருக்கொருவர் அவதூறாக பேசிவிட்டு தற்போது பழனிசாமியை அண்ணாமலை அண்ணன்  என்று குறிப்பிடுவது வேடிக்கையாக உள்ளது எனவும் புகழேந்தி விமர்சித்தார். எடப்பாடி பழனிசாமியை கூட்டத்தில் பங்கேற்க பாஜக அழைத்திருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. விரைவில் அதிமுக யாருடையது என்பது அனைவருக்கும் புரியம் என்றும் தெரிவித்தார்.

Video Top Stories