ஜெயலலிதாவை விட எனது மனைவி ஆயிரம் மடங்கு பவரானவர்: அண்ணாமலை அதிரடி!!

ஜெயலலிதா அம்மையாருடன் யாரையும் ஒப்பிடவில்லை. யாரும் யாரையும் கம்பேர் பண்ணவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தன்மையும் இருக்கிறது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Share this Video

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்திருந்த பேட்டியில், ''சில அரசியல் கட்சிகளில் மானேஜர் இருக்கின்றனர். சில கட்சிகளில் தலைவர்கள் இருக்கின்றனர். டெபாசிட் போனாலும் ஜெயலலிதா துணிந்து நின்று தேர்தலில் ஜெயித்தார்கள். தலைவர் எப்படி இருப்பார் என்பதற்கான உவமை தான் அது. இந்த அரசியலில் காம்ப்ரமைஸ் பாலிடிக்ஸ் எனக்கு தேவையில்லை. என்னுடைய முடிவில் தெளிவாக இருக்கிறேன். பாஜகவின் காலம் வந்து விட்டதாக நான் கருதுகிறேன். 

நான் யாருடனும் என்னை ஒப்பிட்டு பார்க்கவில்லை. எனது தாய், மனைவி ஜெயலலிதாவை விட மேலானவர்கள். அவதூறு வழக்குகள் போடாமல் இருக்கும் தலைவர் நான் மட்டும் தான். மக்கள் மன்றத்தில் கருத்துகளை சொல்லட்டும் , அவர்கள் முடிவு எடுக்கட்டும்'' என்று தெரிவித்தார்.

Related Video