ஸ்டாலின் கை காட்டும் நபர் தான் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ வரமுடியும் - வாகை சந்திரசேகர் பேச்சு!!

வரும் காலங்களில் முதல்வர் ஸ்டாலின் யாரை  பிரதமராக, ஜனாதிபதியாக சொல்கிறாரோ அவர்தான் இந்திய நாட்டின் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ வர முடியும் என திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை தலைவர் வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Share this Video

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தருமபுரி மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அரூரில் கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை நடத்திய கலைஞரும், கலைத் துறையும் கருத்தரங்கில் கொண்டு பேசிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை தலைவர் வாகை சந்திரசேகர் பேசும்போது, வரும் காலங்களில் முதல்வர் ஸ்டாலின் யாரை பிரதமராக ஜனாதிபதியாக சொல்கிறாரோ அவர்தான் இந்திய நாட்டின் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் வர முடியும்.

இந்திய அளவில் உள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சியைச் சார்ந்த தலைவர்கள், இளைஞர்கள் முதல்வர் ஸ்டாலினை தற்போது வரவேற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Video