Asianet News TamilAsianet News Tamil

கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக காந்தி மண்டபத்தில் இருந்து பெரியாரின் பேரன்கள் - அமைச்சர் உதயநிதி பைக் ரைட்

திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாட்டை முன்னிட்டு இருசக்கர வாகன் பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் இன்று தொடங்கி வைத்தார்.

First Published Nov 15, 2023, 5:23 PM IST | Last Updated Nov 15, 2023, 5:23 PM IST

திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாடு வருகின்ற டிசம்பர் 17ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டை முன்னிட்டு கன்னியாகுமரியில் இருந்து திமுக, ரன் வே இருசக்கர  வாகன பிரசாரம். 234 தொகுதிகளையும் சென்றடையும் விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருசக்கர வாகன பிரசாரத்தை இன்று தொடங்கி வைத்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “கோட்சே தூக்கிலிடப்பட்ட இந்நாளில், கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து புறப்படுகிறோம்! 

மாநில உரிமை மீட்புக்கான கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முக்கியத்துவமிக்க மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சேர்க்கின்ற விதமாக, 188 இரு சக்கர வாகனங்களைக் கொண்ட #DMKriders-ன் வாகனப் பேரணியை கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை எதிரே இன்று தொடங்கி வைத்தோம். 

தலைக்கேறிய மது போதையில் பெற்ற தாய், முதியவர் வெட்டி படுகொலை; மகள் படுகாயம்

13 நாட்கள் - 234 தொகுதிகள் - 504 பிரச்சார மையங்கள் - 8,647 கிலோமீட்டர்  என லட்சோப லட்ச இளைஞர்களை சந்திக்கவுள்ள இந்த இருசக்கர வாகனப் பேரணி, கழக வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருக்கும். இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் கழக இளைஞர் படைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! பாசிஸ்ட்டுகளை விரட்டி - மாநில உரிமைகள் மீட்க உறுதியேற்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Video Top Stories