Asianet News TamilAsianet News Tamil

மது போதையில் தாய், மகளை வெட்டி வீசிய போதை ஆசாமி; இருவர் பலி, ஒருவர் கவலைக்கிடம் - திண்டுக்கல்லில் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மது போதையில் பெற்ற தாய், முதியவரை வெட்டி கொலை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

one person arrested who killed 2 persons in dindigul district vel
Author
First Published Nov 15, 2023, 3:52 PM IST | Last Updated Nov 15, 2023, 3:52 PM IST

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோசுகுறிச்சி ஊராட்சி கரையூரை சேர்ந்தவர்  ஈஸ்வரன் (வயது 45). இவருக்கு திருமணமாகி நதியா என்ற மகள் உள்ளார். திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சொந்த ஊர் திரும்பியுள்ளார். பின்னர் மீண்டும் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு மது போதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 13 வயது மகள் நதியாவை அரிவாளால் வெட்டியுள்ளார். 

இதில் படுகாயம் அடைந்த நதியா தம்மை காப்பாற்றிக்கொள்ள வெளியிட் ஓடியுள்ளார். ஆனால், தொடர்ந்து ஓட முடியாமல் வீட்டின் முன் உள்ள சாலையில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். மேலும் வீட்டின் முன் தூங்கிக் கொண்டிருந்த அவரது தாய் செல்லத்தாயையும் (75) ஈஸ்வரன் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே செல்லத்தாய் உயிரிழந்தார். தொடர்ந்து வீதியில் அரிவாலுடன் மது போதையில் சுற்றித்திரிந்த ஈஸ்வரன் அப்பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த  பெரியனாண்டி அம்பலம் (75)  என்ற முதியவரை வெட்டியதில் அவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தோட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து பெண் பலி; அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

தொடர்ந்து சாலையில் நின்று கொண்டிருந்த 2 மாடுகளை வெட்டி உள்ளார். இதையடுத்து மாடுகள் அலறி துடிக்கும் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் இச்சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஈஸ்வரனை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த நத்தம் போலீசார் செல்லதாய், பெரியனாண்டி அம்பலம் ஆகியோரது உடல்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் படுகாயம் அடைந்த மகள் நதியாவை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த நதியா கவலைக்கிடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மது போதையில் மகள் மற்றும் தாய், பக்கத்து வீட்டுக்காரர் என மூன்று பேரை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios