நாங்க எப்பவுமே இரட்டை இலை தான்; அமைச்சர் பொன்முடியை வாயடைக்க வைத்த மூதாட்டி

மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப முகாம் விழுப்புரத்தில் நடைபெற்று வரும் நிலையில், மூதாட்டி ஒருவர் பேசிய பேச்சு அமைச்சர் பொன்முடியை ஒரு நிமிடம் ஆடிப்போகச் செய்தது.

First Published Jul 27, 2023, 10:22 AM IST | Last Updated Jul 27, 2023, 10:22 AM IST

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் குடும்ப பெண்களுக்கு ரூ.1000 வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தில் பயனாளிகளை சேர்ப்பதற்கான விண்ணப்ப முகாம் மாவட்ட வாரியாக நடைபெற்று வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பணிகளை மேற்பார்வை செய்தார்.

மேலும் முகாமிற்கு வந்த பெண்களிடம் திட்டம் குறித்த புரிதலுக்காக சில கேள்விகளையும் கேட்டு விளக்கமளித்துக்கொண்டு இருந்தார். அப்போது மூதாட்டி ஒருவரிடம் உனக்கு எவ்வளவு பணம் வரப்போகிறது? யார் பணம் வழங்குகிறார் என்று அடுத்தடுத்து கேள்வி எழுப்பினார். ஆனால், கேள்விகளுக்கு பதில் அளிக்க விருப்பம் இல்லாதது போல் அமர்ந்திருந்த மூதாட்டியோ நாங்கள் எப்பொழுதுமே இரட்டை இலை தான் என்று கூறியதும் அமைச்சர் வாயடைத்துப் போனார்.

Video Top Stories