மேடையில் இடம் இல்லாததால் தரையில் அமரவைக்கப்பட்ட கேசவ விநாயகம்; பாஜக கூட்டத்தில் சலசலப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் மேடையில் இடம் இல்லாத காரணத்தால் பாஜக மாநில அமைப்புச் செயலாளரான கேசவ விநாயகம் மேடைக்கு கீழே தரையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் குமரி சங்கமம் என்ற பெயரில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. திரளான தொண்டர்கள் திரண்ட இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் மேடையில் அமர்ந்திருந்தனர் இந்நிலையில் பாஜகவின் முக்கிய நிர்வாகி கேசவ விநாயகம் மேடையில் இடமில்லாததால் தரையில் அமரவைக்கப்பட்ட சம்பவம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Video