நீர்நிலையை ஆக்கிரமிப்போர் எந்தக் கட்சியாக இருந்தாலும் எதிர்க்குரல் எழுப்புவோம் - கமல்ஹாசன்

நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதை மக்கள் குற்றமாக கருதி, அதைச் செய்பவர்களை தடுக்க துணிந்து நாம் குரல் கொடுக்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Share this Video

பருவமழை பேரிடர் குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பேசிய வீடியோவை அக்கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில் கமல்ஹாசன் பேசியுள்ளதாவது : “ஒவ்வொரு வருடமும் பருவமழை பேரிடராக மாறுவதற்கு மக்களுடைய கவனக்குறைவு என்று தான் சொல்ல வேண்டும். 

இப்படி ஆனதற்கு அரசின் மீதும் தவறு இருக்கிறது. நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதை மக்கள் குற்றமாக கருத வேண்டும். செய்பவர்களை தடுக்க துணிந்து நாம் குரல் கொடுக்க வேண்டும் அது எந்தக்கட்சிக்காரர்களாக இருந்தாலும் சரி” என கமல்ஹாசன் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

Related Video