பழனிசாமிக்காக பம்பரமாக வேலை பார்த்தவர்களை பழிவாங்கவே சோதனை - வேலுமணி குற்றச்சாட்டு

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் சோதனையைத் தொடர்ந்து அதிமுக மாவட்டச் செயலாளர் ராஜேசை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து பேசினார்.

First Published Sep 14, 2023, 4:43 PM IST | Last Updated Sep 14, 2023, 4:43 PM IST

வடசென்னை வட கிழக்கு மாவட்ட செயலாளரான ஆர்எஸ் ராஜேஷின் இல்லத்தில் நேற்று அதிகாலை முதல் மாலை வரை கிட்டதட்ட சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்சஒழிப்புதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஆனால் சோதனையில் ஏதும் இல்லை என விட்டு சென்றனர்

இந்நிலையில் இன்று ஆர்எஸ் ராஜேஷின் இல்லத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி அவரை சந்தித்து பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்திந்த அவர், அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களை வைத்தே திமுக ஆட்சிசெய்கிறது. மதுரையில் நடைபெற்ற எழுச்சி மாநாடு இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் சரித்திர மாநாடாக நடந்தேறியது. எப்போது சட்டமன்ற தேர்தல் நடந்தாலும் அதிமுக வெற்றி பெற்றுவிடும் என்பதாலேயே இது போன்ற சோதனைகள் நடைபெறுகிறது.

எடப்பாடியாருக்காக சூழன்று வேலை செய்வர்களை பழிவாங்கும் விதமாக இது போன்ற ரெய்டுகள் நடத்தப்படுகிறது என பேசினார்.

Video Top Stories