பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு 13 கிலோ எடை வெள்ளி கவசம் வழங்கிய ஓபிஎஸ்

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதர்வாளர்கள் மரியாதை செலுத்தினர்.

First Published Oct 30, 2022, 4:06 PM IST | Last Updated Oct 30, 2022, 4:06 PM IST

முத்துராமலிங்க தேவரின் 115 ஜெயந்தி விழா மற்றும் 65வது குருபூஜை விழா இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடம் மற்று மதுரையில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க:ஆளுநர் தமிழக மக்களை குழப்புவதற்காகவே வந்திருக்கிறார்.. வைகோ சாடல்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை விழாவை ஒட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதர்வாளர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் ராமநாதபுரம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு சென்று, மாலை அணிவித்து வணங்கினர். பின்னர் பசும்பொன் தேவர் சிலைக்கு 13 கிலோ எடைக்கொண்ட வெள்ளி கவசத்தை வழங்கினார்.

மேலும் படிக்க:மீண்டும் ஒரு ”தேவர் அய்யா” தமிழகத்திற்கு தேவை.. மரியாதை செலுத்திவிட்டு அண்ணாமலை கருத்து

மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் எடப்பாடி அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 

Video Top Stories