ஆளுநர் தமிழக மக்களை குழப்புவதற்காகவே வந்திருக்கிறார்.. வைகோ சாடல்

மதிமுக பொதுசெயலாளர் வைகோ மதுரை கோரிபாளையத்தில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.செய்தியாளர்களை சந்தித்த அவர்,”  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  அபாண்டமாகவும்அவதூறாகவும் பேசி வருகிறார்” என்று குற்றச்சாட்டினார்.  

First Published Oct 30, 2022, 2:33 PM IST | Last Updated Oct 30, 2022, 2:33 PM IST

பசும்பொன் முத்துராமலிங்கதேவர் 115 வது ஜெயந்தி விழா மற்றும் 65 வது குருபூஜை இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.அந்த வகையில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ மதுரை கோரிபாளையத்தில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் படிக்க:மீண்டும் ஒரு ”தேவர் அய்யா” தமிழகத்திற்கு தேவை.. மரியாதை செலுத்திவிட்டு அண்ணாமலை கருத்து

செய்தியாளர்களை சந்தித்த அவர்,”  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  அபாண்டமாகவும்அவதூறாகவும் பேசி வருகிறார்” என்று குற்றச்சாட்டினார்.  மேலும்  சாதி மத வேறுபாட்டிற்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை இந்த இடத்தில் நினைவு கூற விரும்பதாக கூறினார்.பின்னர்  இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னிலுள்ள தேவர் நினைவிடத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ மாலை அணிவித்து வணங்கினார்.