நடை பயணத்தின் போது அண்ணாமலை உணவகத்தில் இளைப்பாறிய அண்ணாமலை

என் மண் என் மக்கள் நடைபயணத்தில் விருதுநகர் மாவட்டத்திற்கு சென்ற அண்ணாமலை தனது பெயரில் இயங்கி வந்த உணவகத்திற்கு சென்று சற்று இளைப்பாறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

Velmurugan s  | Published: Aug 9, 2023, 2:03 PM IST

என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் நடைபயணம் மேற்கொண்டு உள்ளார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை அவரது பெயரில் அதாவது  அண்ணாமலை என்ற பெயரில் உணவகம் இருந்ததை கண்டு திடீரென அந்த உணவகத்திற்குள்  சென்றார். உணவக உரிமையாளரிடம் கலந்துரையாடிய அவரை தொண்டர்கள் கும்பலாக சூழ்ந்ததால் அங்கிருந்து மீண்டும் நடைபயணத்தை தொடர்ந்தார்.

Read More...

Video Top Stories