கூட்டணி முறிவுக்கு பின் பாஜக குறித்து வாய்த்திறக்காத எடப்பாடி பழனிசாமி

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்ட பின்னர் பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்த கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மௌனம்.

Share this Video

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அக்கட்சி சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்திக்காமல் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார்.

இந்நிலையில், ஆந்திரா மாநிலம் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்ற எடப்பாடி பழனிசாமியிடம், அம்மாநில பத்திரிகையாளர்கள் சிலர் சூழ்ந்துகொண்டு அவரிடம் தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்து கேள்வி எழுப்ப முற்பட்டனர், ஆனால், நான் சாமி தரிசனத்திற்காக வந்திருக்கின்றேன். தரிசனம் சிறப்பாக முடிந்தது. வேறு எதுவும் வேண்டாம். ப்ளீஸ், ப்ளீஸ் என கடந்து சென்றார்.

Related Video