Asianet News TamilAsianet News Tamil

Watch: தகுதி இழப்புக்குப் பின்னர் முதன் முறையாக வயநாட்டில் ராகுல் காந்தி ரோடு ஷோ!!

எம்பி பதவி தகுதி இழப்புக்குப் பின்னர் முதன் முறையாக வயநாடு தொகுதிக்கு வந்த ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

First Published Apr 11, 2023, 5:56 PM IST | Last Updated Apr 11, 2023, 5:56 PM IST

கேரளாவின் வயநாடு தொகுதிக்கு இன்று தனது சகோதரியுடன் வந்திருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார். பின்னர், கேரள காங்கிரஸ் தலைவர்களுடன் ரோடு  ஷோவில் பங்கேற்றார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, "'பதிலளிக்க முடியாத கேள்வியைக் கேட்டதற்காக நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டேன். ஒட்டுமொத்த அரசும் கெளதம் அதானியை பாதுகாக்க முயற்சிக்கிறது. பிரதமர் அதானியை பாதுகாக்கிறார். பாஜக நமது ஜனநாயகத்தை தலைகீழாக மாற்றுகிறது. பிரதமர் ஒவ்வொரு நாளும் தனது ஆடை அலங்காரத்தை மாற்றி வருகிறார். ஆனால் சாமானியர்களின் வாழ்க்கை முறையில் எந்த மாற்றமும் இல்லை. வேலைக்காக போராடுகிறார்கள்'' என்றார். 

பாஜகவின் மிரட்டலுக்கு ஒருபோதும் பயப்பட மாட்டேன்... ராகுல்காந்தி அதிரடி!!

சத்தியராஜின் உறவினர் பங்களாவில் தண்ணீர் குடிக்க வந்த குட்டி யானை பரிதாபமாக உயிரிழப்பு