மகாத்மா காந்தி 154 வது பிறந்தநாள்.. புதுச்சேரியில் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய தலைவர்கள்..
காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கும் ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, உள்ளிட்ட அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியடிகளின் 154 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி புதுச்சேரி கடற்கரைச்சாலையில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் உள்ளிடோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் படிக்க:தமிழகத்தை குறி வைத்துள்ள ஆர்எஸ்எஸ்.! இங்கு வேலைக்கு ஆகாது... வாலை சுருட்டிக் கொள்ளனும்-இறங்கி அடிக்கும் திருமா
அதனை தொடர்ந்து காந்தியடிகளின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் தேசபக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சி சார்பிலும் மற்றும் பல்வேறு இயங்கங்களை சேர்ந்தவர்களும், சுதந்திரப் போராட்ட தியாகிகளும் காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.