Wayanad Landslide | தொடர் மழையால் வயநாட்டில் நிலச்சரிவு! 20 பேர் பலி

தொடர் கன மழை காரணமாக வயநாடு மாவட்டத்தில் இரண்டு இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதால் 100க்கும் மேற்பட்டவர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடி வருகின்றனர். தற்போது வரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

 

First Published Jul 30, 2024, 9:13 AM IST | Last Updated Jul 30, 2024, 3:11 PM IST

கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற மலைப்பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அப்போது நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை என்ற இடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள  சூரல்மலை என்ற இடத்தில் 2வது நிலச்சரிவு ஏற்பட்டது.  இந்த  நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 20 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 30 பேர் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Landslide in Wayanad: வயநாட்டில் நிலச்சரிவு! 20 பேர் பலி- 100க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு போராட்டம்