Wayanad Landslide - தொடர் கன மழை காரணமாக வயநாடு மாவட்டத்தில் இரண்டு இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதால் 100க்கும் மேற்பட்டவர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடி வருகின்றனர். தற்போது வரை 100 பேர் உயிரிழந்து இருப்பது தெரிய வந்துள்ளது. 

வயநாடு நிலச்சரிவு

கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்தநிலையில் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற மலைப்பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அப்போது நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை என்ற இடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சூரல்மலை என்ற இடத்தில் 2வது நிலச்சரிவு ஏற்பட்டது. 

Wayanad Landslide | தொடர் மழையால் வயநாட்டில் நிலச்சரிவு! 20 பேர் பலி

Wayanad Landslides | கேரளாவில் பெருக்கெடுத்து ஓடும் நீர் | Asianet News Tamil

100க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு போராட்டம்

நிலச்சரிவில் சிக்கியவர்களை முதல் கட்டமாக அப்பகுதி மக்கள் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இருந்த போதும் இருள் சூழ்ந்த நேரம் என்பதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 100 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு இடங்களில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதே நேரத்தில் கேரள மாநில அரசு மீட்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளது. மீட்பு பணிக்காக கோவையில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் வயநாடு விரைந்துள்ளது. தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் வயநாடு நிலச்சரிவில் சிக்கி ஒரு பாலம் முழுவதுமாக மண்ணில் புதைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது எப்படி.? நடந்தது என்ன.? 300 வீடுகள், பாலம் மாயம்- வெளியான ஷாக் தகவல்