ஜியோ ஸ்பேஸ் ஃபைபர் சேவை.. பிரதமர் மோடியிடம் காட்சிப்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி..

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் தலைவர் ஆகாஷ் அம்பானி, தொலைத்தொடர்பு துறையில் தனது நிறுவனம் செய்து வரும் பணிகளை பிரதமரிடம் விளக்கினார்.

First Published Oct 27, 2023, 12:04 PM IST | Last Updated Oct 27, 2023, 12:04 PM IST

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்திய மொபைல் காங்கிரஸின் 7வது பதிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார். ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் தலைவர் ஆகாஷ் அம்பானி, தொலைத்தொடர்பு துறையில் தனது நிறுவனம் செய்து வரும் பணிகளை பிரதமரிடம் விளக்கினார்.

மேலும் ரிலையன்ஸ் ஜியோவின் ஸ்பேஸ் ஃபைபர் திட்டம் குறித்தும் பிரதமரிடம் எடுத்துரைத்தார். மேலும் இந்த கண்காட்சியில் ஜியோ 4ஜி சேவைகளை வழங்கும் ஜியோ பாரத் சாதனம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதே போல் ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் அடிப்படையிலான ஜிகாபிட் பிராட்பேண்ட் சேவையை ஜியோ ஸ்பேஸ் ஃபைபர் (JioSpaceFiber) என்ற பெயரில் காட்சிப்படுத்தியுள்ளது. இந்தச் சேவையானது இந்தியாவில் அணுக முடியாத பகுதிகளுக்கு அதிவேக இணையத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

ஏற்கனவே ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர்ஃபைபர் மூலம் இந்தியாவில் உள்ள 450 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோருக்கு ஜியோ ஏற்கனவே அதிவேக பிராட்பேண்டை வழங்கி வருகிறது. இந்த நிலையில் ஜியோ ஸ்பேஸ் ஃபைபர் () சேவை, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் டிஜிட்டல் சேவைகளை அணுகுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த புதிய சேவையானது நாட்டின் தொலைதூர பகுதிகளில் ஜியோ ட்ரூ5ஜியின் கிடைக்கும் தன்மையை மேம்படுத்தும்.

ஜியோ ஸ்பேஸ் ஃபைபர், கிர் குஜராத், கோர்பா சத்தீஸ்கர், நப்ராங்பூர் ஒடிசா மற்றும் ONGC-ஜோர்ஹத் அஸ்ஸாம் என இந்தியாவில் உள்ள நான்கு தொலைதூர இடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது: ஆன்லைன் அரசு சேவைகள், கல்வி, சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு சேவைகளுக்கான ஜிகாபிட் அணுகலுடன் புதிய டிஜிட்டல் சமூகத்தில் அனைவரையும் பங்கேற்க அனுமதிக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

லையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் தலைவர் ஆகாஷ் அம்பானி வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஜியோ இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான வீடுகள் மற்றும் வணிகங்களை முதன்முறையாக பிராட்பேண்ட் இணையத்தை அனுபவிக்க உதவியுள்ளது. JioSpaceFiber மூலம், இன்னும் இணைக்கப்படாத மில்லியன் கணக்கானவர்களை ஈடுகட்ட எங்கள் வரம்பை விரிவுபடுத்துகிறோம். "ஜியோஸ்பேஸ்ஃபைபர், எல்லா இடங்களிலும், புதிய டிஜிட்டல் சமூகத்தில் முழுமையாக பங்கேற்க அனுமதிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.