Asianet News TamilAsianet News Tamil

Video: பணத்தை வாரி வாரி வீசிய இளைஞர்.. பண மழையில் நனைந்த பெங்களூர் பொதுமக்கள்!!

பெங்களூரில் உள்ள கே.ஆர் மார்க்கெட்டில் ஒருவர் பணத்தை வீசும் வீடியோ ஆனது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

First Published Jan 25, 2023, 5:14 PM IST | Last Updated Jan 25, 2023, 5:14 PM IST

சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், பெங்களூர் கே.ஆர் புரம் மேம்பாலத்தில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பணத்தை (ரூ. 10 நோட்டுகள்) கொட்டுவது போல் தெரிகிறது. மேம்பாலத்தில் இருந்து கீழே விழும் பணத்தைப் பிடிக்க மக்கள் திரண்டுள்ளனர். பரபரப்பான மார்க்கெட் பகுதியான அதில், அவ்வழியில் சென்ற இருந்த மக்கள் மீதும் பணத்தை வீசி மேம்பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தினார் அந்த நபர்.

நகரின் டவுன்ஹாலுக்கு அருகில் உள்ள கே.ஆர் மார்க்கெட்டில், மேம்பாலத்திற்கு கீழே கணிசமான கூட்டம் கூடியிருந்தது. சம்பந்தப்பட்ட நபர் வினோதமாக, கழுத்தில் சுவர்க் கடிகாரத்தையும் கழுத்தில் அணிந்திருந்தார். மேம்பாலத்தில் இருந்து பணத்தை அவர் தூக்கி எறியத் தொடங்கியவுடன் மக்கள் அவரைச் சுற்றி வளைத்தனர். ரூபாய் 10 மதிப்புடைய கரன்சி நோட்டுகள் இருந்தன.

3,000 மதிப்புள்ள நோட்டுகளை அவர் வீசியதாக, சம்பவத்தின் போது அப்பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்தனர். ஒரு வழியாக அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வெறும் விளம்பரத்திற்காக இந்த செயலில் ஈடுபட்டதாக போலீசாரிடம் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க..ஜனவரி 27 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

இதையும் படிங்க..Bank Holiday: வங்கிக்கு 5 நாட்கள் விடுமுறை!.. வாடிக்கையாளர்களே உஷார்!! எப்போது தெரியுமா.?

Video Top Stories