எச்எம்பிவி வைரஸ் அறிகுறி என்ன? தற்காத்துக் கொள்வது எப்படி? மருத்துவர் விளக்கம்
சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மத்திய அரசு வைரஸ் தடுப்பு கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளது. எச்எம்பிவி வைரஸ் மற்றும் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை மருத்துவர் வினோதினி விளக்குகிறார்.
ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) வைரஸ் சீனாவில் அதிகரித்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் எச்எம்பிவி வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிக்கிறது. மலேசியா, கஜகஸ்தான், யுகே மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் கடந்த சில மாதங்களில் HMPV பாதிப்புகள் அதிகரித்துள்ளன. வைரஸ் தடுப்பு கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. எச்எம்பிவி வைரஸ் பற்றியும், அதில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்றும் மருத்துவர் வினோதினி ஏசியாநெட் நியூஸ் தமிழிடம் பகிர்ந்துள்ளார்.