டிஜிட்டல் இந்தியாவையும் விட்டு வைக்காத யோகி பாபு... வேற லெவல் காமெடி! 'பிச்சைக்காரன் 2 ஸ்னீக் பீக் வெளியானது!

நடிகர் விஜய் ஆண்டோனி நடித்து தயாரித்துள்ள... 'பிச்சைக்காரன் 2' திரைப்படத்தில் இருந்து, ஸ்னீக் பீக் காட்சி வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
 

Share this Video

மே 19ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் 'பிச்சைக்காரன் 2'. ஏற்கனவே இப்படம், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெளியாக இருந்த நிலையில்... இந்த படத்தின் கதை சில சர்ச்சைகளுக்கு ஆளான நிலையில், இது குறித்து நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி, இப்படத்தின் ரிலீசுக்கு தடை விதித்தார். இதனால் தனக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக விஜய் ஆண்டனி தெரிவித்திருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தற்போது ஒரு வழியாக அனைத்து பிரச்சினைகளும் முடிவடைந்த நிலையில், மே 19ஆம் தேதி இப்படம் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி, தயாரித்துள்ளார். மேலும், இசையமைப்பாளராகவும் ஒளிப்பதிவாளராகவும் அவரே பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காவ்யா தப்பார் நடித்துள்ளார். மேலும் ராதாரவி, ஒய் ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஹரிஷ் பிரடி, ஜான் விஜய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படத்தில் இருந்து, யோகி பாபுவின் காமெடி காட்சி ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Video