FIFA World Cup 2022: கண்ணீரும் கம்பலையுமாக வெளியேறிய 3 அணிகள்.. முப்பெரும் தோல்விகளும் காரணங்களும்
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை ஃபைனலுக்கு அர்ஜெண்டினா - ஃபிரான்ஸ் அணிகள் முன்னேறியுள்ளன. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்பட்ட போர்ச்சுகல், ஜெர்மனி, பிரேசில் அணிகளின் தோல்விக்கான காரணத்தை பார்ப்போம்.
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அர்ஜெண்டினா மற்றும் ஃபிரான்ஸ் அணிகள் ஃபைனலுக்கு முன்னேறியுள்ளன. வரும் 18ம் தேதி ஃபைனல் நடக்கிறது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக 2014 சாம்பியன் ஜெர்மனி, ரொனால்டோவின் போர்ச்சுகல் மற்றும் பிரேசில் அணிகளும் மதிப்பிடப்பட்டன. இவற்றில் போர்ச்சுகல் மற்றும் பிரேசில் அணிகள் காலிறுதி சுற்றில் தோற்று கண்ணீரும் கம்பலையுமாக தொடரை விட்டு வெளியேறின. 2014 சாம்பியன் ஜெர்மனி, முதல் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சியளித்தது. இந்த உலக கோப்பையின் முப்பெரும் தோல்விகளான இந்த அணிகளின் தோல்விகளுக்கான காரணங்களை பார்ப்போம்.