கோவில் அருகே சரிமாரியாக வெட்டி கொலை.. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வின் தம்பியை தேடும் காவல்துறை..
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவின் தம்பி புல்லட் ராஜாவின் மனைவிக்கும் ஆட்டோ ஒட்டுனருக்கும் கள்ளகாதல் இருந்ததாக கூறப்படும் நிலையில், நேற்று அவர் கோவில் வாசல் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இருவரால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக கள்ளக்காதலியுடன் வந்த ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
மண்ணச்சநல்லூர் அருகே தத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த பரமேஸ்வரி என்பவர் அதிமுக கட்சியின் மண்ணச்சநல்லூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆவார். இவரது தம்பி ராஜா எனும் புல்லட் ராஜா (41) கொலை வழக்கில் திருச்சி மத்திய சிறையில் உள்ளார்.இதனிடையே சிறையில் இருக்கும் ராஜாவை பார்க்க அவரது மனைவி கிருஷ்ணவேணி ஆட்டோவில் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுனர் சின்னராசு என்பவருக்கும் கிருஷ்ணவேணிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க:மகள் போட்ட டீயை குடித்த குடும்பம்.. 5 பேர் பலியான விபரீதம் - வெளியான அதிர்ச்சி காரணம்
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறியுள்ளது. அண்மையில் ஜாமினில் வெளிவந்த புல்லட் ராஜாவுக்கு இது தெரியவரவே, அவர் தனது மனைவி கிருஷ்ணவேணியை கண்டித்துள்ளார். ஆனால் இருவரும் பழகி தான் வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்றிரவு சின்னராசு தனது ஆட்டோவில் கிருஷ்ணவேணியுடன் ஒன்றாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு முதலில் இறங்கிய சின்னராசுவை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
மேலும் படிக்க:திருமணத்தை மீறிய உறவில் பிரச்சனை… ஆத்திரத்தில் எடுத்த முடிவால் சோகம்!!
இந்த சம்பவத்தில் சின்னராசு ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்து துடி துடித்து அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட கிருஷ்ணவேணி அதிர்ச்சியடைந்து, ஆட்டோவில் இருந்து தப்பித்து இறங்கி ஓடினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சமயபுரம் போலீசார் சின்னராசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுக்குறித்து வழக்குபதிவு செய்து கொலை தொடர்பாக எம்எல்ஏவின் தம்பி புல்லட் ராஜா உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.