மகள் போட்ட டீயை குடித்த 5 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம், மெயின்புரி நாக்லா கன்ஹாய் கிராமத்தை சேர்ந்தவர் ரவீந்திரன். இவருக்கு வயது 55 ஆகும். இவர் அதே பகுதியில் உள்ள தனது மகள் ராம்மூர்த்தி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ராம்மூர்த்தியின் கணவர் சிவானந்தன்(35), மகள் ஷிவாங்(6), மகன் திவ்யான்ஷ்(5) மற்றும் பக்கத்து வீட்டுகாரர் சோப்ரன்(42) ஆகியோர் இருந்தனர். அனைவருக்கும் ராம்மூர்த்தி டீ போட்டு கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க..மதுரை உசிலம்பட்டியில் தெரிந்த எலான் மஸ்க்கின் சாட்டிலைட் - இணையத்தில் வைரலாகும் சூப்பர் வீடியோ !!

அதை வாங்கி கொடுத்த ஒரு சில நிமிடங்களில் ஐந்து பேரும் ஒருவர் பின் ஒருவராக சுயநினைவை இழக்கத் தொடங்கினர். உடனடியாக அவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு டாக்டர்கள் ரவீந்திரன், ஷிவாங் மற்றும் திவ்யான்ஷ் இறந்துவிட்டதாக அறிவித்தனர், சோப்ரனும் சிவானந்தனும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

பின்னர் அவர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சிவானந்தனின் மனைவி ராமமூர்த்தியிடம் நடத்திய விசாரணையில், நெல் பயிருக்கு தெளிக்கப்படும் பூச்சி கொல்லி மருந்தை தேயிலை இலை என்று தவறாகக் கருதி டீ போட பயனபடுத்தியதாக கூறி உள்ளார். இது குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..அண்ணாமலை தொடர்ந்து அவதூறு பரப்புகிறார்! இதெல்லாம் அபத்தம் - எச்சரித்த தமிழ்நாடு காவல்துறை !!