ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்ற விஜய்...பேன்ஸை சந்தித்த வீடியோ வைரலாகி வருகிறது...

படப்பிடிப்பில் இருந்து வெளியே வந்த விஜய் ரசிகர்களுக்கு கை காட்டும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

First Published Sep 28, 2022, 1:25 PM IST | Last Updated Sep 28, 2022, 1:28 PM IST

நெல்சனின் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனரான வம்சியுடன் கைகோர்த்துள்ள விஜயின் இந்தப் படம் குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. ராஷ்மிகா மந்தனா, புஷ்பூ, ஷாம், யோகி பாபு, பிரபு, சரத்குமார் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்துள்ளது. இரண்டு அண்ணங்களுக்கு தம்பியாக விஜய் நடிக்கும் இந்த படத்தில் வெளிநாட்டில் இருந்த நாயகன் குடும்பத்திற்காக கிராமத்திற்கு திரும்பும் தோற்றத்தில் விஜய் நடிக்கிறாராம். ஆனால் படம் பெரும்பாலும் தெலுங்கு சார்பை கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு...25 ஆண்டுகளில் இரண்டே பிளக்பாஸ்டர் கொடுத்துள்ள ஐஸ்வர்யா ராய்..அதுவும் இவர் காரணம் இல்லையாம்!

இந்த படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய். தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் மூன்று போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியது. அதோடு அவ்வப்போது படப்பிடிப்பு தள புகைப்படங்களும் வெளியாவது வழக்கமாகிவிட்டது. 

மேலும் செய்திகளுக்கு...இந்தியன் 2- விற்காக கெட்டப்பை வேற லெவலில் மாற்றிய கமல்..லீக்கான போட்டோஸ் இதோ

ஹைதராபாத், விசாகப்பட்டினத்தை தொடர்ந்து தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சென்னை எண்ணுரில் நடைபெற்ற படப்பிடிப்பு தளத்தில் விஜயை காண ரசிகர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். பின்னர் கூட்டத்தை களைக்க போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் தளபதி எங்களிடம் கை காட்டினால் கூட போதும் ஏன கோபித்து கொண்டனர்.  இந்நிலைகள் படப்பிடிப்பில் இருந்து வெளியே வந்த விஜய் ரசிகர்களுக்கு கை காட்டும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Video Top Stories