
அஜித்தை தனியே தவிக்கவிட்ட திரிஷா - வைரலாகும் விடாமுயற்சி பாடல்
நடிகர் அஜித்குமாரின் 62வது படமான விடாமுயற்சி இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அப்படத்தில் இருந்து தனியே என்கிற பாடல் வெளியிடப்பட்டு உள்ளது.
மகிழ் திருமேனி இயக்கியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். அவர் இசையமைப்பில் இதுவரை வெளியான சாவதீகா, பத்திக்கிச்சு ஆகிய பாடல்கள் பட்டைய கிளப்பிய நிலையில், தற்போது அப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘தனியே’ என்கிற சோகப் பாடலை ரிலீஸ் செய்துள்ளனர். இப்பாடலை அனிருத் தான் பாடி இருக்கிறார்.
தனியே பாடலின் வரிகளை மோகன் ராஜன் எழுதி உள்ளார். விடாமுயற்சி திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஆரவ், அர்ஜுன், யோகிபாபு, ரெஜினா கசெண்ட்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டு உள்ளது.