கோவையில் சிங்கப்பெண்களுக்காக திரையிடப்பட்ட ‘வாரிசு’ ஸ்பெஷல் ஷோ... ஆட்டம் பாட்டம் என அதகளப்படுத்திய வீடியோ இதோ

கோவையில் பெண்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட வாரிசு படத்தின் சிறப்பு காட்சியில் , பெண்கள் கைகளை தட்டி உற்சாக நடனமாடி அசத்தினர்.

Share this Video

நடிகர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியாகி உள்ள வாரிசு திரையரங்குகளில் தற்போது ஓடி வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில் கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பெண்கள் மட்டும் பார்வையாளர்களாக உள்ள சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்து அசத்தியுள்ளனர். கோவையை அடுத்த சாவடி பகுதியில் உள்ள கவிதா சினிமாஸ் என்ற திரையரங்கம் முழுவதும் வாரிசு படத்திற்கான பிரத்யேக காட்சி நடைபெற்றது. இதில் பெண்கள் மட்டும் திரையரங்கில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சிறப்பு காட்சியை பார்க்க வந்திருந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாக நடனமாடி கைகளை தட்டி வாரிசு படத்தை கண்டு ரசித்தனர். பெண்களுக்கு மட்டும் நடைபெற்ற வாரிசு பட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடதக்கது.

Related Video