"தெறிக்கவிடலாமா"; பல நாள் காத்திருப்பு - தல ரசிகர்களுக்கு விருந்தான விடாமுயற்சி டீசர் இதோ!

Vidaamuyarchi Teaser : தல ரசிகர்கள் ஆவலுடன் பல நாள்களாக எதிர்பார்த்த அப்டேடாக விடாமுயற்சி படத்தின் டீசர் இப்பொது வெளியாகியுள்ளது.

First Published Nov 28, 2024, 11:20 PM IST | Last Updated Nov 28, 2024, 11:20 PM IST

விடாமுயற்சி திருவினையாக்கும்.. மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த ஓராண்டு காலமாக உருவாகி வந்த விடாமுயற்சி படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. பொங்கல் திருவிழா ரேஸில் அதிகாரப்பூர்வமாக தல அஜித்தின் விடாமுயற்சி இணைந்துள்ளதாக இந்த டீசர் மூலம் தெரிய வந்திருக்கிறது. நம்பிய அனைவரும் கைவிடும் பொழுது உன்னை மட்டுமே நம்பு என்கின்ற டாக் லைனுடன், பல சுவாரசியமான சம்பவங்களின் கோர்வையாக விடாமுயற்சி படத்தின் டீசர் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல தல அஜித் தன்னுடைய விறுவிறுப்பான நடிப்பால் இந்த திரைப்படத்தின் மூலம் தனது ரசிகர்களை திருப்திப்படுத்துவார் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.